பக்கம்:துளசி மாடம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி டு 2.41

சுமுகமா அட்சதை குங்குமத்தை எடுத்துத் தாளிலே இட்டதை நானே பார்க்கறேன். நீங்க ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும்'-என்றார்.

அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண் டார்கள் அவர்கள். லெளந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பிரெஞ்சிலே அச்சானதும் மறந்து டாமே நீங்க மடத்து லைப்ரரிக்கு அனுப்பி வைக்கணும்" என்று கமலியிடம் கூறினார் அவர்.

ஹோட்டலுக்குத் திரும்பி ரவியும் கமலியும் சிற்றுண்டி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பூர் மடத்து நிர்வாகி அனுப்பியதாகப் பித்தளை டவாலி அணிந்த மடத்து ஊழியன் ஒருவன் ஏதோ ஒரு கடிதத் தோடு அவர்களைத் தேடி வந்திருந்தான். கடிதம் உறையிட்டு ஒட்டி அவன் தந்தை பெயருக்கு எழுதப் பட்டிருந்தது.

ரவி ஊர் திரும்பியதும் தந்தையிடம் சேர்த்து விடுவதாகச் சொல்லி அதை வாங்கிக் கொண்டான்.

24

ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது 'சொல்லாமற் செய்வர் பெரியோர்-என்பதுபோல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கே ட் காம ல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும் பெருந்தன்மையையும் வியந்து கொண்டே சங்கரமங்கலம் திரும்பியிருந்தார்கள் அவர் கள். ரவியும், கமலியும் ஊர் திரும்பிய அதே நாளில் சில மணி நேரம் முன்னதாகவே வசந்தியும் அங்கே பம்பாயி லிருந்து வந்திருந்தாள். சென்னை வரை விமானத்தில் வந்து அப்புறம் இரயில் பயணம் செய்து சங்கர

து-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/243&oldid=579959" இலிருந்து மீள்விக்கப்பட்டது