பக்கம்:துளசி மாடம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57


சொந்த வீட்டில் தங்காமல் வேணு மாமா வீட்டில் போய் தங்கியிருக்கிறானாம்’- என்று ஊரிலே உள்ளவர்கள் பேசத் தொடங்கி விடுவார்கள். .

சர்மாவின் யோசனை சிறிது கலைந்தது! பார்வதி புத்தக அடுக்கும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப் பட்டிருந்தவள் தெருவாசலில் படியிறங்குமுன் அவரிடம் சொல்லிக் கொண்டு போனாள். அவர் மனத்தினுள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக வீட்டின் உட்புறம் எழுந்து சென்றார். கூடத்திலும், மாடியிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். மாடி ஹாலில் கால் அடியினாலேயே நீள அகலத்தை ஒரு முறை அளந்தார்.

அப்போது அவருடைய மனைவி காமாட்சி அம்மாள் சமையலறையில் காரியமாக இருந்தாள். அந்த வீட்டில் குளியலறை இணைப்புடன் தனியாக ஒர் அறை கட்டிக் கொள்ள ரவிக்கு எல்லா உரிமையும் இருந்தது. சில ஆண்டுகளாக மாதாமாதம் அவன் அனுப்பியிருந்த பணமேகூட வட்டியுடன் சேர்த்து ஒரு பெருந் தொகை யாக பாங்க் கணக்கில் இருந்தது. ஆனால் அப்படி யெல்லாம் இருந்தும்கூட அவன் கைப்படக் கடிதத்தில் எனக்கு அந்த வசதி செய்துதர வேண்டும், இந்த வசதி செய்து தரவேண்டும்’ என்று எதுவும் அவருக்கு வற்புறுத்தி எழுதவில்லை. ஒருவேளை அவனே வேணு மாமா வீட்டில் தங்கிக்கொள்கிற எண்ணத்தில்தான் அதெல்லாம் எழுதாமல் இருக்கிறானோ என்றுகூட அவருக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. அவனுடைய வருகையைச் சில நாட்கள் தள்ளிப்டோடச் சொல்வி எழுதவும் இனிமேல் முடியாது. அவர் ஏற்கனவே வரச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை வேணு மாமாவின் பெண் வசந்தி தபாலில் சேர்த்துவிட்டாள்.

இதுவரை இந்தப் பிரச்னையை அவர் யார் யாரிடம் கலந்தாலோசித்திருந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் ரவியின்மேல் அநுதாபத்தோடுதான் பதில் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/59&oldid=579775" இலிருந்து மீள்விக்கப்பட்டது