பக்கம்:துளசி மாடம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 துளசி மாடம்


“என்னமோடா நீ சொல்றே ! எனக்கானா அத்தனை துணிச்சல் வரலே : உங்கம்மாட்டவே சொல்றதுக்குப் பயமாயிருக்கு. மத்தவாகிட்ட எப்பிடிச் சொல்றது ? உனக்கே தெரியும். நான் சொல்லனும்கிறதில்லே. பூரீமடத்துப் பொறுப்பு என் கைக்கு வந்ததிலேருந்து ஊர்லே எத்தனை பேரோட விரோதம் ஏற்பட்டிருக்குத் தெரியுமா ?”

“விரோதத்துக்குப் பயப்பட றதாலேயும் தயங்கற தாலேயும் அது போயிடாதுப்பா ! ...பேஸ் பண்ணித்தான் ஆகனும், நம்மகிட்டத் தப்புத் தண்டா இல்லாதபோது நாம யாருக்குப் பயப்படனும்? எதுக்குப் பயப்படனும்?"

"அதெல்லாம் இருக்கட்டுண்டா : அப்பறம் பேசிக்க லாம். நீ முதல்லே உங்கம்மாவைப் பார்த்துவிட்டு வா... அவ உங்கிட்டச் சரியாகவே பேசலை போலிருக்கே... ? அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் என்னமோ சொன்னியே...? அப்போ அவ ரியாக்ஷன்' எப்படி இருந்தது ?"

"அம்மா, சரியா இல்லே அப்பா ? கமலி நமஸ்காரம் பண்ணினப்பவே அவ மூஞ்சியைத் துரக்கி வச்சுண்டு இருந்தா, தெரு வாசல்லே வச்சு அவகிட்டே விவாதம் பண்ண வேண்டாம்னு நானும் அப்போ பேசாம விட்டுட்டேன்..."

"செம்மண் கோலம். ஆரத்தி எல்லாம் கூட வேணு மாமா பொண்ணும் நம்ம பாருவுமாத்தான் பண்ணி யிருக்கா. காமுவுக்கு இதெல்லாம் பிடிச்சிருக்காது. உன் கல்யாணத்தைப் பத்தி அவ என்னென்னமோ சொப்பனம் கண்டுண்டிருக்கா. தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு நாலு நாள் கல்யாணம், நலுங்கு, மஞ்சள், தேங்காய், ஊஞ்சலோட பண்ணனும்னு அவளுக்கு ஆசை..."

“արrրr வேண்டாம்னா ? சடங்கு சம்பிரதாயத்திலே அத்தனை ஆசைன்னாக் கமலிக்கும் எனக்குமே அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/78&oldid=579794" இலிருந்து மீள்விக்கப்பட்டது