பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

கொண்டு காணுங்கள். எம்போன்ற சுத்த வீரர்கடகு ர்ே கூறும் தவம் தவமாகாது.

உவந்து நீமொழி தவம் அருந்தவம்

அல்லஒன்னலர் உடலுகும்

சிவந்த சோரியின் மூழ்கி மாழ்கு

சிரங்கள் போய்நட மாடுமக்

கவந்த கானகம் மேவி யூடுறு

தீய வெவ்வினை களைவதே

தவம்த னில்தலை யான வீடுறு

தவம் எமக்கிது சாலுமே

அதாவது " முனிவரே, நீர் மொழிந்திடும் தவம் அருங் தவம் அன்று. பகைவர் உடல் போரில் வெட்டுண்டு செங்ரிேல் மூழ்கி, தலைகளும், தலையற்ற முண்டங் களும் பொருந்திய போர்க்களத்தில் இடையே ஊடுறு விக் கிடக்கும் தீய வெவ்வினைகளே ஒழிப்பதே எம் போன்ற வீரர்க்கு வீர சுவர்க்கம் புகுதற்குரிய தவ மாகும். ஆகவே, போர்க்களமாகிய யாக சாலையில் துரியன் முதலான யாக பசுக்களைப் பலியிட்டு, கள வேள்வி செய்ய எண்ணியுள்ளேன் ' என்று தன் வீரம் தோன்ற விளம்பினன். இன்னமும் மேலே பேசத் தொடங்குவானே என்ற எண்ணத்தால் கிருட்டி னன் வாயு புத்திரனை வீமனே அமைதியுறுமாறு கூறி, பின் சஞ்சய முனிவரைப் பார்த்து, முனிவரே