உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணுக்கு விருத்து, காதுக்கு விருந்து, இவை தப்பினுல் வயிற்றுக்கு விருந்து என்றிருந்தால் உள்ளத்திலே கவலைக்கு இடமிருக்க முடியுமா? நான் அன்று 'உறங்கப் போகும் வரையில் இன்ப உலகத்திலே மிதந்து கொண்டிருந்தேன். அதனல் திருமண திகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பிறகு இரவு பதினுெரு மணிக்கு எனக்கு என்றும் இல்லாத வகையில் தூக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. வந்திருந்தவர்களுக் கெல்லாம் படுக்க வசதியாக ஏற்பாடு செய்திருந்தார்கள். கூடம் முழுவதும் ஒழுங் காக மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. தான் அப் படியே ஒரு பட்டுத் தலையணையின் மேல் சாய்ந்தேன். அன்றைய நிகழ்ச்சிகளெல்லாம் ஓர் இன்பப் படக் காட்சி போல மனத்தின்முன் தோன்றித் துரக்க மயக் கத்தோடு கலந்து எனக்கு ஆழ்ந்த அமைதி அளிக்க லாயின. - - அந்த நேரத்தில்தான் எனது சங்கடம் தொடங் கிற்று. எனக்குப் பின்புறத்தி லிருந்து எருமைக் கடா பெருமூச்சு விடுவது போல ஒர் அரவம் கேட்டது. உறுமுவது போலும் குரல் வந்தது. எனக்குச் சந் தேகம் கிளம்பிற்று. யாராவது எருமையையோ அல்லது பன்றியையோ கொண்டுவந்து இப்படி வேடிக்கை செய்யத் தொடங்கி விட்டார்களா என்று. முதலில் நினைத்தேன். ஆனல் சற்று நேரத்தில் உண்மை வெளியாயிற்று. அந்த அரவம் எனக்குப் பக்கத்திலே ஒரு_வெல்வெட் மெத்தையிலே சயனித் திருந்த பேர்வழியின் மூக்கிலோ அல்லது குரல்வளை யிலே இங்குதானென்று திட்டமாகக் கூற முடியாத