பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鸚{靜 ஆா ன் த்தே வீகங்கள் கிழவி : என்னவோ அரை மனசாகத்தான் சொல்லி யிருக்கிருன். அவன் தாய் தினந்தினம் அழுவாள். அதனுல் நல்ல புத்தி வந்திருக்கிறது. இனமங்கை : (யோசஃனயோடு) நான் உங்களை ஒன்று கேட்கலாமா, பாட்டி? அவர் இஷ்டப்படியே கல்யாணம் செய்துகொள்ளும்படி சொல்லியிருந்தால் என்ன கெட்டுப்போகும்? - கிழவி : நல்ல பேச்சு இது. அவள் யாரோ, என்ன சாதியோ? சாதி விட்டுச் சாதி கட்டிக்கொள்ள முடியுமா? ராமசாமி குடும்பம் என்ன லேசா? அவள் கள் கெளரவம் என்ன, காரியம் என்ன? அதெல்லாம் இனமங்கை அவர் இதையெல்லாம் யோசனை செய்யா மலா இருந்திருப்பார்? அவருக்கு அவளிடத்தில் அதிக இஷ்டம்போல் இருக்கிறது. . கிழவி : அவனுக்கா இஷ்டம்? அதெல்லாம் அவள் பண்ணின மாயம், அவன் சாதியை விட்டுப் போவாளு? தங்கமான பிள்ளையாச்சே! இளமங்கை: உங்கள் விருப்பப்படி முழு மனசோடு: ஒப்புக்கொண்டாரல்லவா? . கிழவி என்னவோ முகூர்த்தம் வைத்தாய் விட்டது. கல்யாணம் ஆல்ை எல்லாம் சரியாகிவிடும். எங்கள் காலத்திலெல்லாம் இப்படிக் கிடையாது. தாய். தகப்பன் சொல்படிதான் கல்யாணம் நடக்கும். இதெல்லாம் இந்தக் காலத்தின் கூத்து. இனமங்கை: மனசுக்குப் பிடித்தமாக இருக்கும் இடத் திலே கல்யாணம் செய்து கொள்ளுவதுதானே நல்லது, பாட்டி?