பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யாரது?

யாரோ என் கதவைத்

               தட்டுகிறார்கள்.

யாரது? யார் என்று கேட்டால் பதில்

                வருவதில்லை.

நானே கதவைத் திறந்து

                பார்ப்பதில்லை

உண்டும் குடித்தும் ஆடியும் பொழுதைக் கழிக்கிறேன்! கதவை யாரோ இடையிடையே

                 தட்டும் சப்தம்
 மட்டும் ஒய்வதில்லை.

திடுக்கிட்டு ஓர் வினாடி நின்று

                 பார்க்கிறேன்.

உள்ளத்திலே ஓர் ஒளி

                 மின்னுகிறது.

யாரது என்று கேட்கிறேன். பதில் வருவதில்லை. நானும் கதவைத் திறப்பதில்லை. மறுபடியும் எனது கேளிக்கைகளில் முழுகிவிடுகிறேன் இடையிடையே யாரோ பொறுமையாய்க் கதவைத்

                தட்டுகிருர்கள்.

ஆனல் என் களியாட்டங்களை விட்டுப்போய் கதவை

திறந்து பார்க்க எனக்கு விருப்பமோ எண்ணமோ இல்லை.
            106