பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அழைப்பு

இளைஞனே எழுந்து நில் தளையெலாம் இன்றே தகர்த்திடு; அரியவும் பெரியவும் புரியவந் தவன் நீ இளைஞனே எழுந்து நில்.

அன்னையும் அழைத்தனள் இன்னுமோ உறக்கம் எழுந்து நில்; இன்ப மனைத்தும் கொணர்ந்திடத் துணிந்திடு: இளைஞனே எழுந்து நில்.

சோம்பலும் சோர்வும் போம்படி தோளினைப் புடைத்திடு; வானையும் பிளந்திடும் வன்மைகொண் டவன் நீ இளைஞனே எழுந்து நில்,

சண்டமா ருதம்போல் எண்டிசை தன்னிலும் ஏகிடு புதுப்புதுக் கலைகளும் புதுப்புதுப் பொறிகளும் புதுமையிற் புதுமை செய்.

பழமையின் உயர்வையும் அழகையும் நன்முய் அறிந்திடு; உன்னருஞ் சாத்திரம் உயர்கலை உடையாய் இளைஞனே எழுந்து நில்,

            109