பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதலி கடிதம்


'அண்ணலை நான் மற்றொரு கால்

   காண்பேனே? 

கண்டாலே பாக்கியமே'

   என்றே அரசுறையும் 

எழில் நகரம் தான் வந்தாள்:

   மன்னவனைக் கண்டாள் ; மற்றவன் தன் வார்த்தை சொன்னாள் ; 

‘ஐயகோ அரசுப் பெரும்பாரம் உள்ளத்தில் மலையாகி

   உன் நினைவைத் தான் 
   புதைத்து 

அறவே மறந்துவிட ஆக்கினதே ! மற்றோர் இளமாதை

   மணம் புரிந்த காலத்தும் உன்னை மறந்தேனே,ஐயையோ! 

பெண்மை அணிவிளக்கைப் பெருந்துயரில் வைத்தேனே' என்னத் துயர் உழந்தான்; கன்னியும் சோர்ந்தாள் ; காதற் கடவுளுக்குக் காணிக்கை யாய்ச்சேர்ந்தாள். உதயச் சுடர்நாட்டில்

   உற்ற அவலமிது:-

காதல் மறதியினால்

   கன்னி உயிர் வாடுவதை இக்கதையிற் கண்டோம்
   என்கதையும் இதுதானே ?


            117