பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன் குமரன்

 
உடலை நொறுக்கி யடக்கினால்-நெஞ்சில்
ஓங்குபேர் ஆர்வம் ஒடுங்குமோ ?
கடலின் கொதிப்பைக் குறுந்தடி-வீச்சிற்
கட்டுப் படுத்தவுங் கூடுமோ?

கொடியும் பறந்தது வானிலே-ஆனால்
குமரன் மயங்கி விழுந்தனன்;
வடியுங் குருதியும் மண்மிசை-அடிமை
மாசைத் துடைத்துப் படிந்தது.

"என்னை அடித்த அடியெலாம்-பாரத
அன்னை விலங்கை உடைத்தன ;
முன்னைப் புகழ் அவள் எய்துவாள்- கடைசி
மூச்சில் இதைநானுங் கூறினேன்.
 
ஜயஜய பாரதம்” என்றனன்-அந்தத்
தாயும் மடியினில் ஏற்றனள் ;
"ஜயஜய" என்றனர் யாவரும்-குமரன்
சத்தியம் போல்புகழ் தாங்கினான்.
      

131