பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவியும் ராணாவும்

“என்றன் ராணாப்ர தாபனோ பேசுவோன்
இந்தச் சொல்லையச் சிங்கமும் சொல்லுமோ? நின்ற வீரமும் ஆண்மையும் இற்றைநாள்
நீணி லத்தைவிட் டேகிய தோ?" வென்றாள்.

“மான மின்றி ரஜபுத்ர மன்னர்கள்
மண்டி யிட்டுப் பணிந்தனர் அக்பரை;
மான சிங்கனும் மைத்துனன் என்றனன்;
மாட்சி கெட்டது நம்மனோர் வம்சமே.

“சொந்தத் தம்பியின் சொல்லைப் பொறுக்கிலார்
சோரம் செய்யும் அயவனைச் சூழ்கிறார்; தந்தை நாட்டினை விற்றுப் பிழைக்கிறார்;
தாச ராகக்கை கட்டி உழைக்கிறார்.

“துணைவ ரின்றிப் பலபல சண்டைகள்
தோற்ற தாலென் றன் வீரரும் சோர்ந்தனர்; பிணியில் நொந்தனர்; பசியினில் மாழ்னெர்; பேசுங் கோட்டைச்சித் தூரும் இழந்திட்டேன்.

“ஆர வல்லியக் குன்றில் அலைந்தனம்
அரிய போர்பல செய்து முயன்றனம்;
சூர தீரங்கள் காட்டினோம் ஆயினும்
தோல்வி யேயினிச் சமரெனக் கென்ன சொல்.”

“பார தத்தினைக் காத்திட நம்மிடைப்
பார்த்தி பன்நீர் உண்டென நம்பினேன்;
போரெ டுத்தநற் போதெலாம் மைந்தரைப் போக வென்றுநான் வாழ்த்தி அனுப்பினேன்.

134