பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் நெருப்பு காதலியென் கண்முன்னேநிற்கின்ருள்காண்கிலிரோ? கண்டவர்போல் நீவிரெலாம் காணவில்லை; கண்டிருந்தால் வேதனையின் சளசளப்பாம் வெறும் பேச்சுப் பேசுவிரோ? . மேனியெலாம் கண்ணுக வாய் திறந்து நில்லிரோ? தென்னம் புதுப்பாளை மடலவிழ்ந்து நிற்பது போல் தேநிலவின் சாற்றினிலே வடித்தெடுத்த பொன்னுருவம் சின்னஞ் சிறிய நகை உள்ளமதைக் கிள்ளு நகை தெய்வரம்பை ஊஞ்சலிடும் வானவில்லைப் போல வந்து வண்ணக் கிளிப்பச்சை வளர்காஞ்சிப் பட்டுடுத்தி மகரயாழ் சுரந்துாற்றும் இசைவடிவாய் என்றணிரு கண்ணிமையில் நிற்கின்ருள்; காணிரோ, காணிரோ? கவிதை வெறியூட்டுகிருள்; காமனுக்கோர் புது அர்னம்; பஞ்சுகொண்டு தீயணைக்கும் பயித்தியத்துச் செய்கை யைப்போல் பதமலரின் திறங்காட்டி, பரதத்தின் உயிர்காட்டி நெஞ்சமதில்ஆடுகின்ருள்; நிமிர்ந்தோங்கு காதலெனும் நெருப்புக் கடல் எழுந்த அமுதத்தைப் பெறுவேனே? 156