பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் பார்த்தாளோ?


காலையிளம் பொற்கதிர்கள் கனவின்புதுச் சேதிகளைச்
சாலமிகச் சுமந்தேறிச் சன்னல்வழிப் பாய்கையிலே
மெல்லியவள் முகந்திருத்தி மெதுவா யெழுந்திருந்
மல்லிகைப்பைம் பந்தலின்கீழ் வந்துநின்று (தாள் பார்த்திருந்தேன்
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லா மறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே.
நண்பகலில் வெயில்கனல நளினமலர்க் குளந்தனிலே
தண்புனலில் மின்கொடிபோல் தாதியுடன் ஆடிநின்றாள்
விண்ணிடத்தே கிளைபரப்பி வீசும்வெயில் தனைமறைத்து
மண்ணிடத்தே விழுதுான்றும் வடத்தின்பின் பார்த்து நின்றேன்
அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ?
அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி கானேனே.


173