பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத் திருநாள் ஜயஜய பாரதம் ஜயஜய பாரதம்! ஜயஹிந்த் ஜயஹிந்த் ஜய ஜய ஜயஹிந்த்! திருநாள் வந்தது சுதந்திரத் திருநாள்! பெருநாள் இதனைப் பெருமையாய்ப் பாடுவோம் அன்னேயெம் பாரதி அங்கணிர் துடைத்துச் சின்னஞ் சிறுநகை செய்ததோர் தனிநாள்; நிலமிசை நாமெலாம் தலைநிமிர்ந் தேகிட அடிமை எனும்பேர் அகன்றதோர் நந்நாள்; சுதந்திரத் திருநாள் தோன்றிய திதனை அதிர்ந்தெழு முரசம் ஆர்க்கி , வாழ்த்துவோம். வாழ்த்திடும் போதே மணிநா டின்று வீழ்ந்துள துன்பக் கீழ்நிலை எண்ணுவோம். ஆண்டுகள் பலவாய் அடிமைப் பிணிப்பினல் மாண்புடைக் கலைகளும் வளர்அறிவாற்றலும் சிறுமையிற் பட்டுத் தேய்ந்தன; நாட்டில் வறுமையும் பிணியும் வளர்ந்தன; இன்பம் களிநடம் புரிந்தவிக் காவியப் பூமியில் அளர்இடைப் புழுபோல் அவலவாழ் வுற்றது: மனத்தினில் தாழ்மையும் மருட்சியும் ஓங்கிட வினைத்திறன் அற்று வெம்பினர் மக்கள். எங்கும் இருள்கவிந் திருந்த அந்நேரம் பொங்கும் சுடராய்ப் புதுநெறி பேசி வந்தனன் காந்தி மகாத்மா உரைத்த 175