பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத் திருநாள் இன்மொழி,கேட்டு எழுந்தனம் விழித்தே; பாரெலாம் வியக்கப் படையொன்று மின்றிச் சீரிய அஹிம்சைத் திறத்தினல் சுதந்திரம் அடைந்தனம்; ஆயினும் அடிமையா லுற்ற நெடும்புரைப் புண்கள் நீங்கில இன்னும். விடுதலைப் போரினில் வெற்றிகொண் டதெலாம் பெரிதல; இனிமேல் அருஞ்செயல் ஆற்றிப் புதியதோர் பாரதம் புனைவதே பெரிதாம். மதிமிகும் இளைஞர்காள், வீரமைந்தர்கர்ள், தாய்கை விலங்கு தகர்ந்ததை புன்னி மாயக் களிப்பினில் மதியிழக் காதீர். எங்கு நோக்கினும் என்ன காண்கின்ருேம்? மங்கிய கண்களும் வாடிய வயிறும் நொந்த உள்ளமும் நோய்மிகும் உடலும் அந்தநாளிருந்தநம் இந்தியா வோஇது? அகலாப் பிணிகளாம் அழிபசி தனக்கும் காமவெம் பிணிக்கும் கடற்கரும் பிறவிப் பிணிக்கும்நன் மருந்தைப் பேசிய நாடு உடற்பிணிக் கெல்லாம் உறைவிட மாக இருக்கவும் பொறுப்பதோ? இந்திய மக்காள். மருத்துவக் கலையின் மாண்பெலாங் கண்டோர் ஆயுளைப் பெருக்கும் அருமருந் தறிந்தோர் நாமுள இடத்தே நமஞர்க் கேது வேலையென் றுரைத்த வீறுடைச் சித்தர்கள் சீலமெய்ம் முனிவர்கள் திகழ்ந்தஇம் மண்ணில் பன்றிபோல் வாழ்ந்து பாழ்நோய் மலிந்து குன்றிக் குமைவதோ இன்றுநாள் வரைநாம்? 176