பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாய விமானம் வானிடைப் பறத்தல் ஆ வரம்பிலா இன்பம்! மானிடர் தேவராய் வாழவே வந்தது. காற்றிடைப் பறந்தோம், கடல் மலை தாண்டினேம்; நாற்றிசை மக்களும் நமர் எனக் காணுநாள், அருகினில் இன்றே அணைந்ததென் றிருக்கப் பெருமைசேர் விமானப் பெரும்புள் ளதனைக் கூற்றினும் கொடியதோர் கூற்றுவ னுகவே மாற்றினர் அந்தோ வையகம் நடுக்குற. வானி விருந்து வாழ்வைத் துணிக்கும் சாவினைப் பொழிந்தனர்; துயரினைத் துரவினர்; தேமழை பொழியும் தண்ணளி விசும்பு தீமழை பொழியச் செய்தனர் தீமையோர்; உற்ருர் உறவினர் ஒருநொடிப் பிரித்தது: கற்றநம் வித்தை காலஞய் முடிந்தது. என்றும் பிரியோம் என்றுநற் காதல் அன்றுதான் பேசியோர் அக்கணம் பிரித்தது. விண்ணிடை நீந்தும் வண்ணம் கண்டு மண்ணிடைக் குதித்து மகிழ்ச்சியே பொங்க அங்கை கொட்டி ஆர்த்திடும் சிறுமியைப் பங்க முறவே பாதகம் பொடித்தது. பரிதியைத் திங்களைப் பளிச்சிடும் மீன்களைத் திருவெலாம் கொணரும் சீருடை முகிலைக் 178