பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாய விமானம் கண்டின் புறநற் ககனப் பரப்பினை எண்ணவும் திடுக்கிடும் எமனதாய்ச் செய்தது. இறகினைப் பெற்ற எறும்புதீப் புகுதல் போல் சிறகினைப் பெற்றதே தீமையாய் முடிந்தது. புட்பகம் தீநெறிப் போக்கிய ராவணன் பட்டதோர் கதைதான் பாரறி யாததோ? இன்பம் பயப்பதே இறைநெறி பிழைத்தால் துன்பம் பயக்கவும் சூழ்ந்ததும் மானுடர் அறிவினைச் சோதனைக் காக்கவே யன்ருே? குறிதனை உணர்ந்து கொடுமைகள் தவிர்வமே, இரண்டாவது உலகயுத்தம் கடந்துகொண்டிருந்த காலத் தில் எழுதிய கவிதை இது. l 7 9