பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்

தேன்குழைத்து வெண்ணிலவு
தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
திசையெல்லாம் பொங்கியதோ
வான்செழித்துப் பூத்திருந்த
வண்ணமணித் தாரகைகள்
மாமதியின் மதுமயக்கில்
வளரிசையாய்ப் பொழிந்தனவோ
ஊன்குழையக் குரலெடுத்து
உயிர்தழைய மிதந்துவரும்
உன்காதல் தனிப்பாட்டிற்
குவமைசொல மொழியுண்டோ
மீன்சுழித்த நதிக்கரையில்
வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்லநடந் தமர்ந்த வென்றன்
விழிக்கெட்டாப் பொழிற்குயிலே

உலகத்துச் சிறுமையிலே
உளம்வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்
பலகற்றும் உளம் விரியாப்
பாமரராய் அருளன்புப்

226