பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறங்கிடலாமோ உறங்கிடலாமோ-நீதான் ஒடி அகக் கதவை நாடித் திறந்திடாமல் கறங்குபோல் வாழ்வினில் காலமெலாம் சுற்றி அறங்கெட வாழ்ந்து பின் அனலிடை மறைவதோ பிறவியெடுத்த பயன் பெறுவதே அறிவாம் பேதமை இருள்ஓடப் புரிவதே நெறியாம் மறலியை வென்றவர் மாண்புடை யோராம் மானிட தேகத்தின் குறியிதுவே யாம் விழிப்புடன் வாழ்ந்தவர் வென்றியே பெறுவார் சுழிப்பிலா அமைதியாம் சுகநிலை யெய்துவார். 806 (உறங்கிடர் (உறங்கிடர் (உறங்கிடர் (உறங்கிட) (உறங்கிட)