பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறக்கமே துறக்கம்

கொஞ்சினர் குழைந்தேன்; கொதித்திடும் அன்பினால்
கெஞ்சினர் மிழற்றினர். உள்ளம் கிளுகிளுத்
தரனெனும் நாணம் அஃகவும் துறந்தேன்:
சரணெணத் தம்மையே அர்ப்பணம் புரிந்திடும்
அடியரின் பான்மையில் அலம்பணி மார்பகக்
கடிமிகு கோட்டையின் கபாடம் விடுத்தேன்;
கவ்விடுங் காதல் கண்வழிக் கனன்றிடச்
செவ்விதழ் சுவைத்துச் செவியணி தொட்டுக்
கன்னப் பட்டினைக் கழுத்துவெண் சங்கினை
மன்னிய திருவுடை மலர்க்கரம் துழாவிஞர்:
நெஞ்சகம் விம்மிட நிமிர்ந்தேன்; ஐயகோ
வஞ்சகக் கனவின் மாயைதான் இதுவெனக்
கொஞ்சம் முன்புநான் குறிப்பறிந் திருப்பின்
துஞ்சரித் தெழுவனே தூக்கம் துறக்கமாம்.
          அஃகவும்-தேயவும். கபாடம்-கதவு. துஞ்சரித்து-கண் விழித்து. துறக்கம்-சுவர்க்கம்.

                                                                                                                                                                           808