பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரி

குமரப் பருவத்திலே காவிரிக் கரையிலே நான் கழித்த நாட்கள் எத்தனையோ! ஒருநாள் மாலை வேளை யிலே அங்கு செல்லாது போனாலும் பெரியதோர் ஏமாற்றமாக இருந்தது அப்பொழுது. தனித்தும் தோழர்களுடனும் சென்று ஏதேதோ இன்ப எண்ணக் கோட்டைகள் கட்டிக்கொண்டிருப்பது எனக்கு அள வில்லா மகிழ்ச்சியைத் தந்தது.

பிற்காலத்தில் காவிரி யருகிலே யல்லாமல் வேறி டங்களிலே வாழ நேர்ந்ததால் இந்த வாய்ப்பு வெகு அரிதாகவே கிடைக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறை காவிரியருகில் தோழர்களின்றித் தனி யாக உலாவ நேர்ந்தபோது எழுங்த எண்ணங்கள் இக் கவிதையில் உருவாகியுள்ளன.

இளமைக் கனவுத்தேன்
என்னுளத்தே பாய்ச்சிவிட்ட
வளமை சுரந்துவரும்
வளர்வனப்புக் காவிரியே!

வெள்ளை மணற் பரப்பினிலும்
விரியு மலர் மருங்கினிலும்
துள்ளு புனற் பாட்டினிலும்
தோழருடன் நான்கழித்த

கனலெழுப்பும் சீரிளமைக்
காலத்தை எண்ணி எண்ணி
மனங் குழைந்து நிற்கின்றேன்
மறதியென்றும் கொண்டதில்லை.

33

2