பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கல்

யாதும் ஊரெனச் சாற்றியதும்-

                       மக்கள்
  யாவரும் கேளிர் என்றதுவும்

மேதினிக் குரைத்தவர்

           நம்முன்னேர்-இன்று

வேற்றுமை நாமெண்ணல்

                   சரியாமோ?


பொங்கல் திருநாள் வந்ததுபார்-

                       இனிப்
 புன்மையும் பகையும் 
                   மாய்ந்தழிக

பொங்குக மங்களம்

          உலகெல்லாம்-எங்கும்
 தங்குக் அன்பும் அமைதியுமே.
              56