பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்தியம்

கூற்றுவனம்.அணுப்படையைக்

   கொண்டுகளிப் பெய்தாதீர் மானிடப்பேர் துடைக்க வந்த 
   மாயமெனத் தானறிவீர் 

வீணாய் அழியாதீர்

   மேதினியீர் என்றன்பால் எச்சரிக்கை செய்ய வந்தார்
   இன்பமுற நெறி சொன்னார். சத்தியத்தின் சோதியவர்
   தனிவழியைப் பின்பற்றி

இன்புற் றிருந்திடுவீர்

   இவ்வுலகம் ஒருவீடே ; துன்பமில்லை போரில்லை
   சோதரரே அனைவோரும் ; விண்ணின்பம் பெற்றிடலாம்.
   விரிந்த உளப் பான்மையுடன் கண்விழித்து நோக்கிடுவீர்
   காந்தியுகம் தோன்றியதே.


             68