பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

கவிமனம் படிப்படியாக வளர்ந்தது; வளர்ச்சி கண்டது. பரிபக்குவம் எய்திய மனததிட்டம் உருவானது; வாழ்வின் தத்துவம் சுடர்தட்டித் திகழ்ந்தது. ‘கீதாஞ்சலி’ பிறந்தது தாகூர் உலக அரங்கத்தில் நின்று புகழ்கொடி ஏந்தித் திகழ்ந்தார். 1913ல் நோபல் பரிசு பெற்றார். இந்தியத் துணைக்கண்டம் இறும்பூதெய்தியது. பொய்யெனும் இருட்திரை விலகி, மெய்யான ஒளி கொண்ட நம்பிக்கைச் சுடர் பிரகாசிக்கத் தொடங்கியது.

தாகூர் அரசியல்வாதியல்லர்; ஆனாலும், மாபெரும் தேசியவாதி, வங்கத்தில் நடை பெற்ற சுதேசி இயக்கத்தில் பெரும்பங்கு ஏற்றார். அவரது தேசப்பற்று, உலகத்தின் சகலவிதமான குறுகிய நோக்குகள் அனைத்தையும் சாடி ஓடியது. இந்தியாவின் கழிந்த காலத்திற்கும் நிகழ் காலத்துக்கும் அன்புப் பாலம் கட்டவும் அவர் செயற்பட்டதுண்டு. பலவிதமான கருத்து மாறுதல்களையும் விலக்கி, கிழக்குக்கும் மேற்குக்கும் தொடர்பு வைக்க விரும்பி, காரியங்களில் இறங்கினார் அவர். ‘மனிதாபிமானம்’ பெற்று விரிந்த தாகூரின் இத்தகைய ‘அகில உலகக் கண்ணோட்டம்’ உலகப் பெரியார்களின் நல்லெண்ணங்களை வுயப்படுத்திக் கொண்டது. “இந்தியக் கவி திலகமான தாகூர் பிறரை விட கிழக்குக்கும் மேற்குக்குமான ஐக்கியத்துக்கும் பிணைப்புக்கும் கூடுதலாகவே செய்திருக்கிறார்.” என்று பாராட்டுத் தெரிவிக்கலானார் ரொமெய்ன் ரோலாண்ட்.

செயலுக்கு காந்தி என்றும் எண்ணத்திற்கு தாகூர் என்றும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் நேருஜி.

“வங்காளத்திலே வளர்ந்து வந்த நடுத்தர வகுப்பு நவ இந்தியாவில் நிகரற்ற இலக்கிய மேதைகளை அளித்து, வங்க இலக்கியம் தாகூர் என்ற உலக மேதை மூலம். இமயம் போல உயர்ந்துவிட்டது,” என்று புகழ்ந்திருக்கிறார் பேராசிரியர் ஹுமாயூன் கபீர்.