பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

11

டுள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டனர். பரமகுருவின் குடும்பத்திற்கு இடதுபக்கம் உள்ள வரிசையில் சேர்ந்தாற்போல் இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

பாபுவும், ராதாவும் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டனர். சற்று நேரத்திற்கெல்லாம் விமானத்தின் முன்புறமுள்ள விசிறி பலத்த இரைச்சலுடன் சுழல ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து-

“வணக்கம் நண்பர்களே!”

விமானப் பணிப்பெண் அறிவித்துக் கொண்டிருந்தாள்-

“விமானம் இன்னும் சில வினாடிகளில் புறப்படும். பயணிகள் தங்கள் பாதுகாப்பு பெல்டை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!”

பாபுவுக்கும், ராதாவுக்கும் பரமகுரு பெல்டை மாட்டிவிட்டார். அப்போது, மெல்ல அவ்விமானம் ஊர்ந்து, பின்னர் படுவேகமாக ரன்வேயில் ஓடி ஜம்மென்று முன் காலை உயர்த்தி நிற்கும் குதிரையைப் போல தரையிலிருந்து எழும்பி வானவெளியில் உல்லாசமாகப் பறக்கத் துவங்கியது.

பாபுவும், ராதாவும் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னை மாநகரத்து வானளாவிய கட்டிடங்கள்