பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
அம்மா டாட்டா!

ரோஜா இதழ்களால் நெய்த அழகிய விரிப்பு விரித்தது போல கொழும்பு விமான நிலையத்தின் வரவேற்பு அறை காட்சியளித்தது. தரையே தெரியாதபடி ரோஜா மலர்கள் பரப்பிக் கிடந்தன.

ஆண்கள் தங்கள் மாலைகளை பரமகுருவின் கழுத்திலும்; பெண்கள் தங்கள் மாலைகளை லட்சுமி அம்மாள், காந்திமதி இவர்கள் கழுத்திலும்; சிறுவர்கள் பாபு, ராதாவின் கழுத்திலும் போட்டுக் கட்டித் தழுவிக் கொண்டனர்.

பரமகுரு எல்லாருடனும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார். அழகான பாபுவையும், ராதாவையும் வந்திருந்தவர்கள் மாறி மாறி முத்தமிட்டனர்.

பரமகுரு தன் குடும்பத்துடன் மாமா பொன்னம்பலம் வீட்டில் தங்க ஏற்பாடாகி இருந்ததால், மற்ற உறவினர்கள் எல்லாம் விடை