நீலமணி
21
நேரம் மகிழ்ச்சியில் திளைத்திருந்த லட்சுமி அம்மாளின் விழிகளில் இப்போது கண்ணீர் துளிர்த்து நின்றது.
“விஜயன் வரலியா?” என்று வள்ளியிடம் லட்சுமி அம்மாள் கேட்டபோது அவள் குரல் தழுதழுத்தது
வள்ளியம்மை தலையசைத்தாள்.
‘பட்டும் நகையுமாய் எப்படிச் செல்வத்திலே மிதக்க வேண்டியவளிவள்; எப்படி உருக்குலைந்து விட்டாள்,’ என்று உள்ளத்தில் ஒருகணம் எண்ணிய போது லட்சுமி அம்மாளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஆயினும் அதை அடக்கிக் கொண்டு,
“இது உன் மகனா வள்ளி! பெரியவனாயிட்டான். என்ன பேரு வெச்சிருக்கே?” என்று கேட்டாள்.
“அருணகிரி!” அவனே தன் பெயரைச் சொன்னான்.
“படிக்கறியா?” லட்சுமி அவனது கன்னத்தைத் தன் விரல்களால் தடவியபடி கேட்டாள்.
“ஒன்பதாம் வகுப்பு!” என்றான்.
பாபுவும், ராதாவும் பாட்டியின் அருகில் நின்று அவனையே பார்த்தபடி அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
தெ-2