பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

49

யும் கேட்க சுற்று வட்டாரங்களிலிருந்தெல்லாம் மக்கள் வந்து கூடுவார்கள்.

விஜயன் வந்து விட்டதை அறிந்ததும், மக்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கூடியிருந்த மைதானத்தின் மத்தியில் போட்டிருந்த மேடையின் மேல் நின்று கொண்டு விஜயன் தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். மகுடியில் மயங்கிய பாம்புகளைப் போல் மக்கள் அவன் பேச்சை மெய்மறந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.