64
தென்னைமரத் தீவினிலே...
குடும்பத்து பையன். தங்களுடைய அந்தஸ்துக்கு சிறிதும் ஒத்துவராது வீணே உறவினர்களின் ஏளனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என எவ்வளவோ ஞானாம்பாள் மகளுக்கு புத்தி கூறினாள் ஆனால், ஒரே பிடிவா இருந்தாள் வள்ளி.
அதற்கு மேலும் விஷப் பரீட்சை செய்ய ஞானாம்பாள் மனம் ஒப்பவில்லை “சரி வருகிற ஒரு முகூர்த்தத்தில் உனக்கும், விஜயனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறேன். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, நீ, யாரோ நான் யாரோ. என் சொத்துக்களில் ஒரு காம் கூட உனக்கு கிடைக்காது. இது நிச்சயம்!” என்றாள் ஞானாம்பாள். அப்படியும் வள்ளியம்மையின் மனம் மாறவில்லை.
இதயத்தினுள் பொங்கியெழுந்த எல்லையற்ற துயரத்தை அடக்கிக் கொண்டாள் ஞானாம்பாள். உறவினர் யாரையும் அழைக்காமல், கதிர்காமம் முருகன் சன்னதியில், வள்ளியம்மை விஜயனுக்கு சிறப்பாக மணமுடித்துக் கொடுத்தாள். மறு நிமிஷமே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கார் ஏறி ஊருக்குப் போய் விட்டாள் ஞானாம்பாள்.
அதன் பிறகு, வள்ளியம்மை வீட்டிற்கு ஞானாம்பாள் சென்றதில்லை. இனி தன் மனைவிக்கு அந்த உறவு இல்லை என்பதை விஜயன் உணர்ந்து கொண்டு விட்டான். கனகவிஜயன் தன் தாயாருடன் தனது மனைவி வள்ளியம்மையை