பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. குணமாலையிலம்பகம்- சீவகன் பொழிலாட்டிற் குண மாலை சுண்ணம் புகழ்ந்து அவள் அசனிவேகமென்னுங் கட்டியங்காரன் பட்டக்களிறு கோட்பட்டு ரி ய தனெ தி ரேறிச் செருக்கடக்கி விலக்கி அவளை மணஞ்செய்த வர லாறு கூறுவது. பதுமையிலம்பகம்--சீவகன் சு தஞ்சண னென்னுந் தேவனாற் கட்டியங்காரன் யாப்புறுத்த காவலிற்றப்பிப் பஃறேய யாத்திரை போந்து பல்லவதேயத்துச் சந்திராய் நகர்க்கரசனான தன பதி மகள் பதுமை யைப் பாம்புவிட மகற்றியவளன் பிற் கோப்புண்டு அவளை மணந்த வரலாறு கூறுவது. கேமசரியி லம்பகம்-சீவகன் றக்க நாட்டி லுள்ள கேமமா புரம்புக்கு அந்நகர் வணிகன் சுபத்திரன் மகள் கேமசரி ஆடவற்பேணாளை யாண்மையிற் பேதுறுத்து மணஞ்செய்த வரலாறு கூறுவது. கனகமாலையிலம்பகம்- சீவகன் மத்திம தேயத்து ஏம மாபுரமெய்தி அப்புராதிபனான தடமித்திரன் குமாரர்க்கு விற்கலைகற்பித்து, அவ்வித்தகங்கா 7 ண மாக அவன் மகள் கன க.மாலையைக் கலியாணஞ் செய்த வரலாறு கூறுவது. விமலையி லம்பகம்--சீவகன் றண்ட காரணியமெய் திக் தாய் விசையையைத் தரிசித்து அவள் வரம் பெற்றுத் தன் னகர் எமாங்கத நாட்டிரா சமாபுரத்தினோர் பாற் செல் லுழி ஆண்டுள்ள சாகர தத்தன் மகள் விலை கண் வலைப் பட்டு அவளை மணந்த வரலாறு கூறுவது | சுரமஞ்சரியி லம்பகம்- சீவகன் என் சுண்ணம் பழித் தலிற் பரிந் து ஆடவற்சினந்து அவற் கூடலோம்பேன் என்று விரதஞ் சாதித்தாள் சுரமஞ்சரியை வேடமறைந்து