பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தென்மொழிவரலாறு, சமயங்களும், ஆலயங்களும், வித்தியாமண்டபங்களும், அவர்கள் சந்நிதியிலே உயிர்ப்பிச்சை வேண்டுங் கதியிற் புகுந்தன. அரும்பெரும் நூல்களெல்லாம் அம்மிலேச்ச ராலே அக்கினிக்கூட்டப்பட்டன. அவ் வக்கினிக்குத் தப்பின நூல்கள் கிராமாந்தரங்களில் பதுங்கிக் கிடந்தன சிலவேயாம். துருக்கரைக் கர்வபங்கஞ்செய்த மகா ராஷ்டிர அரசர் காலத்திலும் தமிழ்வித்து வான்கள் சிறிது தழைத்து அனேக நூல்கள் செய்தார்கள். அதன் பின்னர்ச் சிற்றரசராலும் மடாதிபதிகளாலும் தமிழ் பரிபாலிக்கப்பட்டு வருவதா யிற்று. அது வும் பின்னர் நாளிலே களர்ந்தது. பவணந்தி. இவர் தொண்டை நாட்டிலே சனகாபுரியிலே சன்மதி முனிவருக்குப் புத்திரராய்வதரித்துத் தமிழ்ப்புலவராய் விளங்கிய ஒரு சமண முனிவர். சீயகங்கன் கேள்விப்படி தொல்காப்பியத்தைச் சுருக்கிப் பாணினீய வியாகரண அடைவுப்படி நன்னூல் என்னும் இலக்கணஞ் செய்தவர். அந்நூற் சூத்திரங்கள் மிக்க திட்பமும் நுட்பமு முடை யன வென்பது சர் வாங்கீகாரம். “மொழி முதற் காரண மாமணுத்திரளொலி யெழுத்து” என்று ஒலியெழுத்திற் கிலக்கணங் கூறிய அவர் சாதுரியம் பெரிதும் வியக்கற் பாலது. குற்றெழுத்து வல்லெழுத்து மெல்லெழுத்திடை யெழுத்துக்களுக் கெல்லாம் எண் கூறி வரையறுத்த வர். ஐயும் ஒள வும் எல்லா விடத்தும் நெட்டெழுத் தாகாவென் பது உய்த் துணர வைக்கும் பொருட்டு நெட்டெழுத்திற்கு மாத்திரம் " ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் என்று வாளா சூத்திரஞ் செய்த குசாக்கிர புத்தியின து ஆற்றல் அத்தி யற்புதம். இவ்வாறே ஒவ்வொரு சூத்திரமு மொ வ்வோ