பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தென்மொழிவரலாறு. ன். உருத்திரசன்மனென்பான். பைங்கண்ணன் புன் மயிரன் ஐ யாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப்பிள்ளை உளன்; அவனை அன்ன னென்றிகளாது கொண்டுபோந்து ஆசன மேலிரீ இக்கீழிருந் து சூத்திரப்பொருளுரைத்தார், கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்துவாளா இருக்கும்; அவன் குமாரதெய்வம்; அங்கோர் சாபத்தினாற் தோன்றினான்." என முக்காலிசைத்த குரல் எல்லா ர்க்கும் உடன்பாடாயிற்றாக, எழுந்திருந்து தேவர்குலத்தை வலங் கொண்டுபோந்து, உப்பூரிகுடி கிழாருழைச் சங்கமெல்லாஞ் சென்று, இவ்வார்த்தையெல்லாஞ்சொல்லி, ஐயனாவான் உருத்திரசன்மனைத் தரல்வேண்டுமென்று வேண்டிக்கொடுபோந்து, வெளியது உடீஇ, வெண் பூச்சூட்டி, வெண்சாந்தணிந்து. கனமாப்பலகையேற்றிக் , கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைக் கக்கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஓரோவிடத்துக்கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர்நிறுத்திப், பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரர் உரைத் தவிடத்துப்பதன் தொறுங் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர்சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரைபெற்றாம் இந்நூற்கென் றார். . இனிக் காமப்புணர்ச்சியென்பது தலைமகனுந் தலைமகளும் தமியராய் ஒருபொழிலகத்து எதிர்ப்பட்டுத் தம்முணர் வின பன்றி வேட்கைமிகலினாற் புணர்வதென்பது. ஆயின் இவர் மேற்பொரு வி றந்தார் தலைமகனுந் தலைமகளுமென் றமையான், அவனுங் கற் கந்தும் எறிபோத்துங் கடுங்கண் யானையுந் தறுகட்பன்றியுங் கருவ ரையும் இருநிலனும் பெருவிசும்புமனை யார் ஆளிமொய்ம்பினர் அரி மான்றுப்பினர் பற்பனூறாயிரவர் கூர்வேலிளை யர் தற்சூழ்ச் செல் வனென்பது முடிந்தது. இவளும் உடன் பிறந்து உடன் வளர்ந்து நீர் உடனாடிச் சீர் உடன் பெருகி ஓல் உடனாட்டப்பால் உடனுண்டு பல் உடனெழுந்து சொல்லுடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார் பற்பனூறாயிரவர் கனணு மன முங் கவரும் ஒண்ணு தன் மகளிர் தற் சூழத்தாரகை நடுவட்தண் மதிபோலச் செல்வாளென்பது முடிந்தது.