பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. சொற்கள் ஆக்கிக்கொள்ள வும் வடமொழியிலிருந்து அ னேக சொற்களை மொழிபெயர்த்துக்கொள்ளவும் அனே கசொற்களைத் தற்பவம் தற்சமமாக வாங்கவும் அவசிய பாயிற்று. கடவுள் வழிபாட்டுக்கு அநேக சொற்களும், வடமொழியிலிருந்து கொள்வானம் மொழிபெயர்க்கவும் அவசியமா ஆயிற்று. சிற்பசோதிடங்களுக்கும் அனேகபத ங்களை வாங்குவதும் மொழிபெயர்ப்பதும் இன்றியமை யாதனவாயின. தமிழிலக்கண இலக்கியங்களுக்குஞ் சில சொற்கள் வேண்டப்பட்டன. அவ்வாறு செய்தாரா யி னு ம் எழுத்துக்களை மாத்திரம் வாங்காது உள்ள எழுத்துக் களைக் கொண்டே அச்சொற்களை அமைத்துக்கொண்ட னர். வடசொற்கள். அரசன் என்னும் பெயர் வடமொழி ராஜ் என்னும் காதுவிற்றோன்றிய து, இராசா என்பதும் அவ்வடி யாகப் பிறந்தது. முன்னே கூறியபடி பூர்வ தமிழ்மக்கள் இரா சாங்கத்தோடு கூடி..! அரசனை யுடையரல்லர். அகஸ்தி யர் வந்தபின்னரே இராசாங்கம் அமைக்கப்பட்டது. அ ரசன் என்னும் பெயர் வழக்கும் அவர் வந்த பின்னர் உண் டடாய தாம். முன்னே மக்களுட் சிறந்தோர் க்கு வழங்கிய அண்ணல், ஆண்டகை, இறை, இறைவன், எந்தல், இங் கல், குரிசில், கோ, கொற்றவன், கோமான், கோன், தலை வன், தோன் றல், பெருந்தகை, பெருமகன், பெருமான், பொருகன், மன்னவன், மன்னன், மன், மீளி, முதல்வன், வேந்தன் என்னுஞ் சொற்கள் அரசர்க்கு ஆக்கிக்கொள் ளப்பட்டன. இவையெல்லாஞ் செந் தமிழ்ச் சொற்கள். அயன்றோள் வந்தோன் என்பது வாகுஜன் என்னும் வட மொழிச்சொல்லின் மொழிபெயர்ப்பு. அதிபன், அதிகா ரணன், சக்கிரி, தராபதி, நரபதி, நிருபன், பதி, பார்த்தி வன், புரவலன், பூபதி, பூபாலன், மண்டலீகன் என்னும்