பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. தென் கீழ்த்திசையிலுள்ள து. சோனகம் என்பது ஆரியா வர்த்தத்துக்கு வடமேற்றிசையிலுள்ளதேசாந்தரம் சாவ கம் என்பது தமிழ்நாட்டுக்குத் தென்கீழ்த் திசையிலே அதி தூரத்திலே சமுத்திரத்திலுள்ளதேசம். சீனம் வட கீழ்த்திசையில் அதி தூரத்திலேயுள்ள தேசாந்தரம். சோ னகமெனினும் யவன மெனினும் ஒன்றே. ஆரியாவர்த்தத் துக்கு வடமேற்றிசையிலுள்ள தேச மெல்லாம் அக்கால த்தில் யவனர் அதிகாரத்திலிருந்தமையால் சோன கமென் னுமொரு பெயர் கொண்டே தமிழரால் வழங்கப்பட்டன போலும் யவனர் வாணிகம் பற்றித் தமிழ்நாட்டிற்கு வரு வதுந் தங்குவதும் போவதுமா யிருந்தனர். யவனர் நுண் ணிய சிற்பத்திலும் வல்லவர்கள். தமிழ்நாட்டினின்றும் பண்டமாற்றி மீள்வதோடு கல்வித்துறைகளிலும் பல கற் றுப்போவாராயினர். சீனரும் தமது தேயத்திலில்லாத பண்டங்களைத் தமிழ்நாட்டினின்றுங் கொண்டேகுவர். தமிழ்நாட்டிற் சுருங்கிய பொருளைத் தமது நாட்டினின்றுங் கொண்டு வந்து விற்பர். அவர் கொண்டுவந்து விற்கும் பொருள் பட்டுங் கர்ப்பூரமுமாகும். தமிழர் இங்ஙனம் பல தேயத் தாரோடு பன்னெடுங் காலம் பயின்றாரேனும். அவர்களுடைய சொற்களை யா யி னும் .ழக்க வழக்கங்களிற் சிலவற்றையா யினும் மேற் கொண்டாரில்லை. தமிழிலே வந்து வழங்குஞ் சீன ச்சொல் ஒன்றேனுமில்லை. (பீங்கானென் னுஞ்சொல் பிற்காலத்து வந்து வழங்குவது. அதுவும் ஐரோப்பியரால் வந்தது.) சீனக்காரம், சீனப்பட்டு, சீன மல்லிகை, சீன மிளகு, சீன முத்து முதலிய சொற்கள் சீனதேசத்திலிருந்து தமிழ் நாட்டில் வந்த பண்டங்களேயாயினும் சீனமென்னுமடை கொடுத்து வழங்கப்படுந் தமிழ்ச்சொற்களாம். பண்டைக்