பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு, கூறப்படுகின்றது. தபு என்னுஞ்சொல் எடுத்துச்சரிக்கக் கொல் என்னும் பொருளும், படுத்துச்சரிக்க விடு என் னும் பொருளுந் தருவதாம். இதனை | ('உப்பகார மொன்றென மொழிப் விருவயினிலையும் பொருட்டாகும்மே என்னுஞ் சூத்திரத்தானுமுரையானுமறிக. தொல் காப்பியர் காலத்தில் யகரம் ஆகாரத்தோடு கூ டி. யல்லது மொழிக்கு முதலாகாது. அஃது ஆவோடல்வது யகர முதலா து” என்னுந் தொல் காப்பியச் சூத்திரத்தாலறியப்படும். அவருக்குப் பிற்கா லத்தார் அ ஆ உ ஊ ஓ ஒள யம் முதல் எனச் சூத்தி ரஞ்செய் து யகரம். இவ்வாறு பயிரோடும் மொழிக்கு முதலா மென் றனர். தொல்காப்பியர் சூத்திரஞ் செய்த காலத்திலே யவ! னர் யுகம் யூகம் யோகம் யௌவனம் என்னுஞ் சொற்கள் வடமொழியிலிருந்து வந்து தமிழில் அருகி வழங்கினவே னும், தமிழ்ச்சொல்லுக்'கே இலக்கணஞ்செய்யப் புகுந்தா ராதலின் அவற்றைத் தமிழ்ச்சொல் அல்லவென் றொ துக் குவாராயினர். பின்னர் நால்செய்தோர் காலத்தில் வட சொற்கள் தமிழில் வந்து பெருகி வழங்கின டைம:யால் அவற்றைத் கழுவுவாராயினர். தொல்காப்பியர் காலத்திலே ஒரு மொழிக்கண்ணே ஞ் ந் ம் ன் என்னும் புள்ளிகளின் முன்னர் யகரம் மயங்கி வந்ததாகத் தெரிகின்றது. அவ்வழக்கு நச்சினார்க்கினியர் தங்காலத்துக்கு முன்னர் வீழ்ந்ததாகக் கூறுவர். உரிஞ் யாது பொருந் யாது திரும் யாது தெவ்யாது என மயங் குதல் இக்காலத்துண்டேனும் அது இருமொழிக்கண் வருவது.