பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


மாசி: கண்டேம்மா, கண்டேன்! உன்னுேட ஆசைக் கனவையும் மாணிக்க மாப்பிள்ளைக்குச் சொந்தமான உன் அன்பான நெஞ்சையும் தன்னேட அருமைப்பிள்ளை கந்தசாமி காலடியில் பாத காணிக்கை வைக்கணும்னு சொல்ருரு உன் மாமன்!...என் மச்சினன்! - தெய் (விழித்தபடி அப்பா மாசி : இன்னுமா விளங்கல்லே?...நீ அந்தக் கந்தசாமியைக் கட்டிக்கோணுமாம்! இல்லாட்டி, நான் அவருக்குப் பட்டிருக்கிற ரெண்டாயிரம் ரூபாய் கடனுக்கு வழி சொல்லோனுமாம்!...இல்லாட்டி, என் மானத்தை ஏலத்துக்கு விட்டுப்பிட்டுத்தான் இவரு தூங்குவாராம்!... தெய்: அய்யோ! தெய்வமே காளி ஆத்தா! மாசி : தெய்வானை.கண்ணிலே கண்ணிரை வச்சுக் கிட்டு அழைச்சா, காளி ஆத்தா வரமாட்டா!...ஏந்தெரி யுமா, மகளே! நம்ப கண்ணிருதான் ஆத்தாளுக்கு வேடிக்கையும் விளையாட்டும்...நம் பிணங்களை சோதனை செய்யிறதிலே தெய்வத்துக்கு ரொம்ப ஆசை. ஆன ஒங்க ரெண்டு பேர் விசயத்திலே மட்டும் அப்படி நடக் கவே நடக்காதுன்னு நான் முந்தி ஒருநாள் உங்கிட்டே சொன்னேனே, அது பொறுக்காம ஆத்தா பழிவாங்கப் போறப் போலேருக்கு கண்ணுலத்தை எப்பிடி நடத்தி முடிக்கிறதின்னே புரியாம நான் திக்குமுக்காடிப் போயி ருக்கிற வேளையிலே இந்த இடியை என்னலே எப்படி அம்மா தாங்க ஏலும்? தெய்: நீங்க என்னப்பா பதில் சொல்லிவிட்டு வந் மாசி : ஏம்மா இப்பிடி சந்தேகமாக கேட்கிறே?பணயம் வச்சிட்டு வருவேனு அம்மா?... த்தான் கண்னே ஈடு வச்சுக்கிட்டு வந்திருக்