பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


தெய்: ஆமா, மாணிக். ஹி ஹி..அந்த மச்சான் உடம்புக்கு ஒண்ணும் இல்லையே? ம்...இந்தாலே பாரு வேலாயி! .அந்த மச்சான் நேசமாத் தந்ததே அந்த மோதரம் பெரிய சுமை மாதிரி சுமக்குது, என்னமோ தப்பு செஞ்சிட்ட கணக்கிலே!..இது என் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாக் குத்துது! இதை உடைமைக்காரங்க கிட்டேயே நீட்டிப்பிடு, வேலாயி! இந்தா.மோதிரம்! வேலாயி: ம்...அப்படியே செய்கிறேன். தெய்வானை! அதோ, உன் புருஷனும் வந்திட்டாங்க! நல்ல நேரம். பிழைச்சிட்டோம்! (அப்போது கந்தசாமி உள்ளே நுழைகிருன்..! கந்தசாமி: (வந்துகொண்டே) யாரு, வேலாயி தங் கச்சியா? அத்திப்பூ பூத்த மாதிரி இருக்கே! ஆமா, அந்த மாணிக்கம் பயல் ரொம்பப் பசையா வந்திருக் கானமே? ஐயாவோட ரோசம் மூணு வருசத்தோடேயே காலாவதி ஆகிப் போயிடுச்சாமா? வேலாயி என்னமோ தெரியலிங்களே அண்ணுச்சி! நான் போயிட்டு வாரேன், தெய்வானை! -- (மெட்டி ஒலிக்கச் செல்கிருள்) கந்தசாமி. தெய்வானைப் புள்ளே, என்ன மூஞ்சி ଊଓ மாதிரி இருக்கு? - தெய்: எப்பவும் போலத்தானுங்களே இருக்கு... போரிலேயிருந்து வைக்கோலைப் பிரிச்சுப் போட்டேன். துன்சி ஏதாச்சும் பட்டுக் கிடக்கும், அம்பிட்டுத்தான்!