பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 (பெருந்தேவியின் கத்தல் கிள்ளுவனைக் கிடு கிடுக்க வைக்கிறது. அவன் நடு நடுங்கு கிருன்.) கிள் : ஐயையோ! யாரோ திருடன்! கோவூரார் வீட்டுலே புகுந்து கலாட்டா செய்யருன். ஒடி வாங்க! எல்லோரும் ஓடி வாங்க! பூத : ஆமாம்; வாங்க, வாங்க. சீக்கிரம். (இருவருடைய கூக்குரலையுங் கேட்டு அக் கம் பக்கம் வீட்டுக்காரர்களெல்லாம் கதவு களைத் திறந்துகொண்டு ஓடோடி வருகின்ற னர்.) மக் 1 : என்ன? என்ன? மக் 2 : யாரு? யாரு? மக் 3 : எங்கே? எங்கே? (கி ள் ளு வ ன் ஓடிப்போய் அவர்களை அழைத்து வந்து புறக்கடை மதிலக் காட்டு கிள் : திருடன் இந்த மதிகலத் தாண்டித்தான் குதிச்சான். உள்ளே போய் ஏதோ உருட்டருப் போலிருக்கு பெருந் தேவியம்மா கூவினது கேட்டது. (உடனே சிலர் புறக்கடைக் கதவைத் திறக்க முயல்கின்றனர். சிலர் வெளிக் கதவைப் போய்த் தட்டுகின்றனர். சிலர் மதில்மீது ஏறி உள்ளே குதிக்கின்றனர். கொஞ்ச நேரத்துக் கெல்லாம் வெளிவாயில் கதவு திறக்கிறது. புறக்கடைக் கதவும் திறக்கிறது. எல்லோரும் உள்ளே புகுகின் றனர்.)