பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 1 (நக்கண்ணன் வாய் திறக்காமல் நடுக்கத் துடன் நடக்கிருன்.) வள் : தறிகெட்டு அலபாயும் மனத்தைக் கட்டுப்படுத்தாத தல்ை உன் கெளரவமும் குடும்ப கெளரவமும் செல்வம் செல்வாக்கும் எல்லாம் ஒரு நொடியில் பாழாய்ப் போய் விட்டது, தெரிந்து கொண்டாயா? (நக்கண்ணன் கண்ணிர் விடுகிருன்.) வன்! நீ திருமணம் ஆனவன் என்று சொன்னர்களே! மனைவி கூட அழகாய் இருப்பாளாமே? (நக்கண்ணன் கூனிக் குறுகியவாறு தள் ளாடி நடக்கிருன்.) வள் : தம்பி! உன் மனைவியை ஒருவர் இப்படிக் கெட்ட எண் ணத்தோடு நெருங்கினல் நீ எப்படி ஆத்திரப்படுவாய்? பிறருக்குரிய பொருள் மீது நாட்டம் செலுத்தலாமா? இந் தக் கூடா ஒழுக்கத்தால் நீ என்ன இன்பத்தைக் கண்டு விடப் போகிருய்? ஒவ்வொரு கட்டத்திலும் பயமும் பகை யும் ஆபத்தும் அல்லவா உன்னை ஆட்டிப் படைக்கும்? அது மட்டுமா? இதல்ை ஏற்படும் பழியும் பாவமும் என் றென்றும் அல்லவா உன் குடும்பத்தை அலேக்கழித்துத் துன்பத்தில் ஆழ்த்தும். பிறருடைய பெண்டிரை நயந்து எத்தனையோ பேர் நாசமாயிருக்கிறர்கள்; தெரியுமா? கிள் : இவருக்கு நன்ன புத்தி சொல்லியனுப்புங்க, ஐயா! வள் : தம்பி! ஆண்மையென்ருல் ஆடவன் பல பெண்களைக் கட்டியாள்வது என்று தவருகக் கருதிக் கொண்டிருக்கிருர் கள். புலன்களைப் பொறிவழி செல்லவிடாமல் கட்டுப்படுத்து வதுதான் ஆண்மை. மனைவியிடமன்றி மற்ற மகளிர்பால் இச்சை செலுத்தாமல் இருப்பதுதான் ஆண்மை. பிற பெண்களைத் தாய்மாராகவும் சகோதரிமாராகவும், மகள்க அனாகவும் மதித்துப் போற்ற வேண்டும்.