பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 பிறன்மனே நோக்காத பேராண்மை சான்ருேர்க்கு அறன் ஒன்ருே? ஆன்ற ஒழுக்கு. இம்மொழியை எப்போதும் உன் உள்ளத்தில் வைத்துக் கொள். என்ன! (நக்கண்ணன் திருவள்ளுவரின் திருவடி களில் நெடுஞ்சாண்கிடையாக வி ழு ந் து: விடுகிருன்.) கக் : ஐயா! என்னைக் காப்பாற்றுங்கள். கேவலம் மோகத்தால் மதியிழந்து கள்ளனவிடக்கேடுகெட்டவனகி விட்டேன். இனி என் வாணுளில் இதுபோன்ற இழிவான இச்சைக்குச் சிறிதும் இடங் கொடுக்க மாட்டேன். (வள்ளுவருடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணிர் விடுகிருன்..} வன்: எழுந்திரு; தம்பி எப்போது உன் தவறை உணர்ந்து விட்டாயோ, அதற்காக உண்மையில் வருந்துகிருயோ அப்போதே மன்னிப்புக்கு உரியவனுகி விட்டாய். இனி, தீ நிச்சயம் திருந்தி விடுவாய். உன் மனேவிக்கு உண்மை: யான கணவனாக இருந்து அன்பு செலுத்தி நல்வாழ்க்கை. வாழ்வாயாக! (மற்றவர்கள் இக்காட்சியை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றனர். கிள்ளுவன் பூதகியை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய காரியத் தைச் சாதித்து விட்டது போல பெருமிதத். துடன் மிடுக்காக நடக்கிருன். நக்கண்ணன் வள்ளுவருடைய அருள் ஒழுகும் முகத்தைக் காண விரும்புகிறன். ஆனல் அச்சம் அவனை அழுத்துகிறது.)