பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அவருக்குத் துணையாக மதுரைக்குத்தான் வந்து கொண் டிருக்கிறேன். நாம் மூவருமாகப் போய் தலைகனம் கொண்ட சங்கப் புலவர்களைத் தட்டிக் கேட்டு விட்டு வருவோம். - ஒள : எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு தான். வள்ளுவரின் திருக்குறள் அரங்கேற்றத்தையும் காணலாம் அல்லவா? இடை : திருக்குறள் அரங்கேறுவதற்கு உங்கள் உதவி வேண்டும்; ஒளவைப் பெருமாட்டியே! வள் : ஆமாம்; அம்மா! கலைமகள் போல் விளங்கும் நீங்கள் என் நூல் அரங்கேற்றத்துக்குப் பேருதவி புரிய வேண்டும். ஒள : கட்டாயம் செய்வேன். ஒரு நல்ல நூலே நானிலமும் அறியச் செய்விக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். ஐயா! வள் : மிக்க நன்றி, அம்மா! இடைக்காடரே! என்னுடைய, மூத்த சகோதரி போலுள்ள ஒளவை மூதாட்டியை எனக்கு. அறிமுகம் செய்து வைத்ததற்காக உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். - இடை நமக்குள் 2-ಬರ್ಕ್ வார்த்தை எதற்கு வாருங்கள்;. விரைந்து செல்வோம். மீண்டும் மழை வருவதற்கு முன். ஒள : (மேலே வானத்தைப் பார்த்துவிட்டு) வானம் வெளி வாங்கி விட்டது. இனி மழை வராது. ஆலுைம், பொழுது சாய்வதற்குள் நகர எல்லயை அடைந்து விடவேண்டும். (மூவரும் வேகமாக நடக்கின்றனர்.) காட்சி-37 காலம் கால் • . இடம் : மதுரைத் தமிழ்ச்சங்கம் . உறுப்பினர் வள்ளுவர், இடைக்காடர், ஒளவை யார் மற்றும் புலவர்கள்.