பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 (மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் முதலியவர்கள் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். சங்கப் பணியாளன் ஒருவன் வந்து வள்ளுவர், ஒளவையார், இடைக்காடர் ஆகிய மூவரும் வந்திருப் பதை அறிவிக்கிருன்.) வணியாளன் : ஐயா! யாரோ மூவர் வந்திருக்கிருர்கள். உங்களைப் பார்க்கணுமாம். கக் : யார்? எதற்காக நம்மைப் பார்க்கனுமாம்? சிறுமேதாவியார் : புலவர்கள் என்று சொல்லிக் கொண்டு யாராயினும் வந்திருப்பார்கள். வெள்ளிவீதியார் : ஏதாயினும் ஏடுகள் எடுத்துக் கொண்டு வந்திருக்கிருேம் என்று சொல்லியிருப்பார்களே! பணி : புலவர்கள் என்றுதான் சொன்னர்கள். ஒருவருடைய . கரத்தில் ஒரு பெரிய சுவடி கூட இருந்தது. கக் சரி! சரி! போய் அவர்களை வரச்சொல்லு. கபிலர் தலைவர் இறையனரும் அரசர் உக்கிரப் பெருவழுதி யாரும் இல்லையே! அவர்கள் நூலே ஆராய்வதற்கு. கக் நாமே பார்த்து அனுப்பிவிட்டால் போகிறது. (பணியாள் போகிருன். சில விநாடிகளில் ஒளவையார் முன்னே வர, இடைக்காடரும் வள்ளுவரும் உள்நுழைகின்றனர். நக்கீரர் ஒளவையாரைப் பார்த்து விட்டுத் திடுக்கிடு கிருர். கபிலரும் பரணரும் மகிழ்ச்சி கொள்ளு கின்றனர்.) வள் : வணக்கம், ஐயா! கக் : நீங்கள் யார்? எந்த ஊர்? வள் : (பாடுகிருர்)