பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.58 எந்தஊர் என்றீர்? இருந்தஊர் நீர்கேளிர்! அந்தஊர் செய்தி:அறியீரோ-அந்தஊர் முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய் அப்பாழும் பாழாய் அறும். - கக் : என்ன! குறும்பாகப் பதில் சொல்கிறீர்? இடை : நீங்கள் நாடறிந்த நல்லிசைப் புலவர்களல்லவா! நான் ஒரு செய்தி சொல்லுகிறேன். அதை ஒரு பாடலாகப் பாடிக் காட்டுவீர்களா? சிறுமேதாவியார் . அது என்ன சொல்லும்?. இடை : ஒரு ஆற்றங்கரை, அதில் ஒரு மாமரம். அதன் கிளேயில் ஒரு காக்கை உட்கார்ந்திருக்கிறது. அது கா! கா!’ எனக் கரைகிறது. அவ்வழியாக இடைச்சிறுவன் ஒருவன் வருகிருன். காக்கையை ஒட்ட அவன் கையில் கோலில்லை. ஆனால், ஒலிக் குறிப்பாலேயே அதை ஒட்ட முயல்கிருன். அவன் ஒலித்த ஒலி எவ்வாறு இருக்கும். என்பதை அந்த ஒலிக்குறிப்புத் தோன்ற ஒரு பாட்டுப் பாடுங்கள்; பார்க்கலாம். (புலவர்கள் ஒருவரை யொருவர் திகைம் - புடன் பார்க்கின்றனர்.) - இடை : (ஏளனமாக) என்ன தெரியவில்லையா? நான் பாடட்டுமா? கக் நீர் கூடப்பாடுவிரோ? இடை : கேளும்; பாடுகிறேன். ஆற்றங் கரையின் அருகிருந்த மாமரத்தில் காக்கை யிருந்து க.க.."எனக் - காக்கைதனை எய்யக் கோலில்லாமல் இச்1 இச்1 இச்!’ என்ருன் வையக் கோளுர்தம் மகன். - கபி ; பலே! மிக நன்ருயிருக்கிறதே! - (நக்கீரர் முதலிய புலவர்கள் அவமானத் தால் தலே குனிகின்றனர்.) r