பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 உருத்திரசன்மர், நக்கீரர் முதலிய புலவர் கள் புடை சூழ வீற்றிருக்கின்றனர். அவர் களுக்கு முன்ல்ை ஒளவையார், வள்ளுவர், இடைக்காடர் உட்கார்ந்திருக்கின்றனர். அவையோருந் திரண்டிருக்கின்றனர்.) வள் : வணக்கம், தலைவர் இறையனர் அவர்களே! அரசர் பெருமானே! புலவர் பெருமக்களே! இறை: அரசர்: வணக்கம்; வாருங்கள்; ஐயா! ஒளவை மூதாட்டி யாரும் வந்திருப்பது எங்களுக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. அம்மையாருடைய வருகை அரி தா கி விட்டதே! - ஒள : தகலவரும் மன்னரும் கூழுக்குப் பாடும் இந்தக் கிழவிக்குக் காட்டும் அன்புக்கும் மதிப்புக்கும் மிக்க நன்றி. இறை : வள்ளுவரே! உம் நூலேக் கொண்டு வந்திருக்கிறீரா? வள் : (சுவடியை எடுத்து நீட்டியவாறு) கொண்டு வந்திருக் கிறேன்; இந்தாருங்கள்; ஐயா! (இறையனரிடம் தருகிருர்.) உக் : நேற்று இந்த நூலேப் பார்வை இடுவதற்குத் தர மறுத்து விட்டாராமே! வள்ளுவரே! முன்னதாகப் பார்த் தி ரு ந் தால் அரங்கேற்றத்துக்கு எளிதாக இருக்கும் அல்லவா? - இடை : (குறுக்கிட்டு) தந்திருக்கலாம். ஆல்ை......? இறை : ஏன் தயங்குகிறீர்கள்? சொல்லுங்கள். இடை : இங்கு எவர் நூல் எழுதிக் கொண்டு வந்தாலும் இது பழைய நூல்; பழைய ஏடுகளைப் பார்த்து எழுதி வந்தது’ எனக் கூறி விரட்டி விடுவார்கள் என்றும், அரங்கேற்ற வந்தவர் தம் நூலைப் படித்துக் காட்டிக் கொண்டு வரும் போதே சிலர் தலைவர் ஆசனத்துக் கடியில் மறைந்திருந்து பழைய ஏடுகளில் அதை எழுதிக் கொண்டே வந்து, இதோ பாருங்கள்; அந்தப் பழைய ஏட்டுப்பிரதி