பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16] என்று எடுத்துக் காட்டி மருள வைத்து விடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருந்ததால்தான், வள்ளுவர் நக்கீர ரிடம் அதை முன் கூட்டித் தருவதற்குப் பயந்தார். கக் (ஆத்திரமாக) இது யாரோ பொருமையால் கட்டிவிட்ட பொய்க் கதை. இத்தகைய வஞ்சனச் செயல் வேறு எந்தச் சங்கத்திலாயினும் நிகழ்ந்திருக்கலாம். இறைய ேைர தலைவராயிருக்கும் தமிழ்ச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் நல்லிசைப் புலவர்களாகிய நாங்கள் நல்ல நூல் களாயிருந்தால் உவகையோடு ஏற்றுக் கொள்வோம்: உக் நமது சங்கத்தில் இருப்பவர்கள் நல்லியல்புடைய வர்கள் என்பதை நானிலம் அறியுமே! இறை : நாவிருப்பவர்கள் நாலுஞ் சொல்வார்கள். நாம் அதைப் பொருட்படுத்தக் கூடாது. இப்போது நாம் அரங்கேற்றத்தைக் கவனிப்போம். வள்ளுவரே இந்தா ருங்கள்; நீங்கள் தந்த சுவடி. படித்துச் சொல்லுங்கள். வள் : ஒலச்சுவடி உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் ஏதா யினும் பார்த்துக் கேட்பதற்கு வசதியாயிருக்கும். நான் நினைவு ஏட்டில் அனைத்தையும் பதித்து வைத்திருக் கிறேன். உரு : அதிசயிக்கத் தக்க அறிவாற்றல் இது; ஐயா! உக் அதில் என்ன ஐயம்? இறை : வள்ளுவரே! நம் சங்கப்பலகையில் வந்து அமர்ந்து உம் நூலே அரங்கேற்றும். ஒள ஆமாம்; அதுதான் முறை. கக் : சங்கப் பலகையில் வள்ளுவரோடு யார் இருப்பது? உக் ஆமாம்; யார் உடன் இருப்பது? - (இறையனர் புன்முறுவல் செய்துவிட்டு மெளனமாக இருக்கிருர். மற்றப் புலவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்கின் றனர். வானிலிருந்து ஒலி எழுகிறது.)