பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அசரீரி : திருவள்ளுவரோடு சங்கப் பலகையில் உருத்திர சன்மர் உடனிருப்பாராக! இறை : உருத்திரசன்மரே! அசரீரியின் வாக்குப்படி நீங்கள் போய் திருவள்ளுவருடன் சங்கப் பலகையில் அமருங்கள். அவர் அரங்கேற்றட்டும். (உடனே உருத்திரசன்மர் எழுந்து திருவள் ளுவரைக் கைப்பிடித்து அழைத்துச்சென்று சங்கப்பலகையில் அமர்த்தித் தாமும் அவ. - ருடன் அமர்கிருர்.) - இறை : (சுவடியைப் பிரித்துப் பார்த்தவாறு) இந்நூலே நீங்கள் எழுதியதன் நோக்கம் என்ன? வள்ளுவரே! . வன் : அறியாமை என்னும் இருட்டில் சரியான தடந் தெரியா மல் தடுமாறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அறிவொளி ஊட்டி நன்னெறி காட்டவே திருக்குறளை இயற்றினேன்; ஐயா! கக் : இந்நூலில் எப்பொருள் குறித்து விவரித்திருக்கிறீர்கள்? வன் . முதன்மையாக அறத்தை. அடுத்து பொருளுக்கும் இன் பத்துக்கும் இடந் தந்திருக்கிறேன். கபி : வீடுபேற்றைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையா? வன் : அதைத் தனியாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அறத்திலேயே அடங்கி விடுகிறது. கக் : அறம் என்ருல் என்ன? விளக்க முடியுமா?. வன் : மனத்தில் மாசு எதுவும் இல்லாமல் இருப்பதுதான் அறம். அறனெனப்பட்டது இல்வாழ்க்கையே; அதல்ை வருவதுதான் உண்மையான இன்பம். கக்: நீங்கள் அறத்தின் வழி பொருளே ஈட்டமுடியுமா? பொய், புரட்டு இல்லாமல் அதைச் சேர்க்க முடியாது என்கிருர் களே? -