பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 வள் : சரியல்ல; பொருளை அற வழியிலேயே ஈட்ட முடியும். அதற்கு மனஉறுதி வேண்டும். கபி : நீங்கள் சொல்லும் பொருள் அருளுக்கு வழி காட்டுமா? பொருள் வந்துவிட்டால் மக்கள் மருளில் ஆழ்ந்து விடுவார். கள் என்பதை நடைமுறையில் பார்க்கிருேமே! வள் : அதெல்லாம் இல்லை. பொருள் என்னும் பொய்யா விளக்கம் மருளாகிய இருளையெல்லாம் அடியோடு விரட்டி விடும். ஆல்ை, அது அன்போடும் அருளோடும் வரவேண் டும். அருள் என்னும் அன்பு பெற்ற குழந்தை பொருள் என்னும் செல்வச் செவிலியால்தான் நன்ருக வளர முடி யும். தீய வழியில் பொருளேத் திரட்டினல் அது நிலைத்து நிற்காது என்றும் நான் இந்நூலின் வாயிலாக எச்சரித்து இருக்கிறேன். கக் : பொருளைப்பற்றிப் பேசியது போதும். இன்பத்தைக் கவனிப்போம். X பர : (நகைத்து) எல்லா உயிர்களுமே இன்பத்தைத் தானே அவாவிக் கொண்டிருக்கின்றன? அறம், பொருளைப் பற்றி யெல்லாம் அவைகளுக்கு அதிக அக்கரையில்லை. வள் : அப்படிச் சொல்வதற்கில்லே. இன்பத்தை முற்ருகத் துய்ப்பதற்குங்கூட அறத்தின் சார்பு அவசியம். பொருள் அதற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். இறை : அப்படியா? - ஒள : என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? இறையனருக்குத் தெரியாததா? வள் : அறத்தால் வருவது தான் உண்மையான இன்பம் என் பது என் கருத்து. அன்பும், அறமும் துணையாக இருந் தால் தான், இல்வாழ்க்கை வாயிலாக ஆணும் பெண்ணும் துய்க்கும் இன்பம் பண்பும் பயனும் உடையதாய் இருக் கும். இவைகளையெல்லாம் நான் முப்பாவிலும் நன்கு விரித்துரைத்திருக்கிறேன். .