பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இறை : வேறு ஏதேனும் கேட்க வேண்டுமா? நக்கீரரே!

கக் : இல்லே. நான் கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டு விட்டேன். வள்ளுவர் தந்த விளக்கம் எனக்கு மன நிறைவை யளித்து விட்டது. -உக் : நக்கீரரே இப்படிச் சொல்லிவிட்ட பின்னர் வேறு யாருக்கு என்ன கேள்வி கேட்க வாயெழும்? w உரு : வள்ளுவத்தை நாம் இன்னும் உரைத்துப் பார்க்க முற் பட்டோமானல், நம்முடைய அறிவின் மாற்றுத்தான் குறைந்து போகும். சிறுமேதாவியார் : ஒரேயடியாக அப்படிச் சொல்லி விடுவதற் கில்லே நாம் வள்ளுவர் குறளே இதுவரை உரைத்துப் பார்த்தது ஒருபுறமிருக்கட்டும். சங்கப்பலகை இந்நூலே எப்படி எடை போடுகிறது என்று பார்ப்போம். :பர : (பரிகாசமாக) அட! நாம் வேறு; சங்கப்பலகை வேரு? மேதாவியார் மூளை குறுக்கில் பாய்கிறதே! இறை : விளக்கமாகச் சொல்லுங்கள் உங்கள் கருத்தை. அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்? சிறு : சங்கப் பலகையைக் கொண்டு போய் பொற்ருமரைக் குளத்தில் மிதக்க விடுவோம். அதில் நாம் 49 புலவர்களும் அமர்ந்து திருக்குறளையும் வைக்கச் செய்வோம். சங்கப் பலகை அதை ஏற்றுக் கொண்டால், திருக்குறள் ஒப்பற்ற நூல் என்று நாம் ஒப்புக் கொள்வோம். இல்லையானல்... இறை : சங்கப்பலகை ஏற்றுக் கொண்டால்தான் நீர் வள்ளு வர் குறளே ஒப்புக் கொள்வீர். அவ்வளவு தானே!(அரசனை நோக்கி) மன்ன! சிறுமேதாவியார் சொல்கிறபடியே செய்து விடுவோமா? உக் செய்து விடுவோம். உருத் எனக்கு வேலையில்லாமல் போய்விட்டது.