பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஜீவியத்தைச் சீராக்கும் செந்தமிழில் கதையலவும் ஒவியத்தைப் போல்எழுதி உள்ளத்தைக் கவரும்ஒரு காவியத்து எழுத்தாளர் கலேயழகுப் பத்திரிகை பூவியலில் வல்லவர்நற் பூரணத்தை நாடுபவர். பூரண ஞானம் பெற்றுப் பொலிவுறத் தமிழர்வாழ்வில் காரண காரியங்கள் கலையொளி பெருகிச்சேர ஆரணம் பலபயின்ற ஆன் றநற் கதைகள் கூறும் தாரதுைரைக் கண்ணர்தாம் நல்லவர் நம்மில்மூத்தோர். 3. மூத்ததல் மரபிளுேடும் முன்புள்ள புதுமைச்சோலே பூத்திடும் கதைகளோடும் புரையிலா நாடகங்கள் பாத்திடும் ஆற்றலோடு அழகுநூல் பலபடைத்த தனத்திறக் கவிஞர் இந்த நாடெல்லாம் அறிந்த நல்லோர் 4 அறிந்தவர் தம்மைக்கண்டால் அன்பினில் உருகும் உள்ளம் செறிந்தவர்; ஜீவாஎன்னும் சிறப்புடைப் பெயரில்சேவை புரிந்தவர், நாற்பதாண்டாய்ப் பைந்தமிழ்ப் பயிரே செய்து பெருத்தமிழ்த் தோட்டம்கண்ட பண்ணேயார் வாழ்க! வாழ்க! 5 பண்ணைகள் வைத்தாலென்ன? பலன் எல்லாம் நாட்டுக்கேதான் பெண்ணவின் ஆற்றில் நன்கு பெருகிடும் வெள்ள மெல்லாம் மண்ணிதை வளமேசெய்யும் வளருத மழையைப் போல . எண்ணத்தைப் பொழியும்.இந்த எழுத்தாளர் இனிது வாழ்க! 6. வாழ்கஇவ் வள்ளல் தந்த வள்ளுவர் நாடகத்தை வாழ்கின்ற தமிழர் வாங்கி வனம்பெற மேடை வேற்றி யாழிசை இனிமையோடு எல்லோரும் காணுமாறு: ஏழிசைக் கலைஞச்செய்தால் இந்நாடு நன்றிகூலும். 笼 宵