பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 (மாணவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் கொல்’ என்று ஏளனமாக நகைத்துக் கை கொட்டி ஆடுகின்றனர்.) வள் : நான் சொல்வது உங்களுக்கு விந்தையாக இருக்கிற தல்லவா? மா : 3 : வேடிக்கையாக இல்லாமல்......? வள் : நான் உங்களை ஒன்று கேட்கிறேன், சொல்வீர்களா? மா : 2 : கேள், செல்லுகிருேம். வள்: உங்களுடைய ஜாதியைப்பற்றியும் உங்கள் தாய் தகப் பைைரப்பற்றியும் கேட்டால் உடனேசொல்லிவிடுவீர்கள். மா: 1 : உன்னேப் போலச் சொல்லத்தெரியாத அவல நிலேயில் நாங்கள் இல்லையே! - வள் : அது சரி! உங்கள் குலம் கோத்திரம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? உங்கள் பாரம்பரியம் தெரியுமா? மா : ஏன் தெரியாமல்! மா 1: நான் ராஜ வம்சத்தில் வந்தவன். மா 3: நான் பிராம்மண வகுப்பைச் சேர்ந்தவன். மா 2: நாங்கள் வைசிய குலம். மா : 4: நாங்கள் சிவபெருமான் சடாபாரத்தில் தோன்றிய வேளாள ஜாதியார். - வள் : அதுதான் தெரியுமே. இந்த வர்ணுசிரம தருமமெல் லாம் இருக்கட்டும். அது எப்படி ஏற்பட்டது என்பது பெரிய விவகாரம். அதைப்பற்றி வேருெரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம். உங்கள் கோத்திரத்தைச் சொல்லுங்கள். மா : 2: நான் பிருங்கி மகாரிஷி கோத்திரம். மா : 1. நான் பராசர முனிவர் கோத்திரம். மா : 3: நான் வசிஷ்ட மகாரிஷி கோத்திரம்.